நாட்டை வந்தடைந்துள்ள 28,000 மெற்றிக் தொன் யூரியா உரம்
உலக வங்கியின் கடனுதவியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட 28,000 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த உரம் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
துகள் வடிவில் விவசாயிகளால் அதிகம் கேட்கப்படும் உரம் இது என்று கூறும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த பருவத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கி 110 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 125,000 மெட்ரிக் தொன்கள் பெறப்படும் என்றார்.
அத்துடன் இன்று முதல் இதனை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.