41 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்பு

-யாழ் நிருபர்-

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 41 கிலோ கஞ்சா கடற்படையினரால் இன்று திங்கட்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்ட இக் கஞ்சாவை கடத்தி வந்த குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேநேரம் கஞ்சாவை கடத்தி வரப் பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபருடன் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.