
பிள்ளையானுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த யாழ்.உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்
-யாழ் நிருபர்-
வடக்கு – தெற்கிற்கிடையே உள்ள உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிபடுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற வளாகத்தை பார்வையிட சென்ற யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் அணி, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அரசியல் பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு முண்டியடித்திருந்தனர்.
குறித்த விஜயத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர், மானிப்பாய், சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

