சிங்கர் பினான்ஸ் 48வது கிளை திறந்து வைக்கப்பட்டது
-கிளிநொச்சி நிருபர்-
குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பிரதி பிராத்திய முகாமையாளர் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்ட விருத்தினர்கள் வரவேற்பு நடனத்துடன் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து, தேசிய கொடியினை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறி மோகன் ஏற்றிவைந்ததுடன், சிங்கர் பினான்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துசாந்த் அமலசூரிய நிறுவன கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து சிங்கர் பினான்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துசாந்த் அமலசூரிய கிளையினை திறந்து வைத்தார்.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டதுடன் , சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்றது. தொடர்ந்து நிறுவன சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி நகரின் A9 வீதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தில் வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் 4வது கிளையாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
