நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை

நாடு முழுவதும், குறிப்பாக பிற்பகல் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வட, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் அவ்வப்போது மணிக்கு 45 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக, பிரதேசங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்