சுவிட்சர்லாந்தில் கடுமையான இடியுடன் கூடிய மழை , வெளிப்புற நிகழ்வுகளுக்கு தடை : மக்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களில்  இன்று சனிக்கிழமை மாலை இடம்பெறவிருந்த அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. ஃப்ரிபோர்க் மாகாணத்தில் புயல் வீசக் கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் மத்திய வானிலை சேவையான மாலை 4 மணிக்கு  தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி  இடியுடன் கூடிய மழையின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க ஆபத்து சாத்தியம் என்று அறிவித்ததுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் ஆலம்கட்டி மழையும் பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை முதல் வெளிப்புற தங்குமிடங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் , காற்று மற்றும் ஆலங்கட்டி மழையிலிருந்து வெளிப்புற பொருட்களை  பாதுகாத்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலை உச்சிகள் ,மரங்கள், கோபுரங்கள் மற்றும் திறந்த பகுதிகள் போன்ற நீர்நிலைகள் மற்றும் மின்னல் தாக்கங்களுக்கு ஆளாகும் இடங்களாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் இப்பகுதிகளில் தங்குவதை  தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலல் சனிக்கிழமை பிற்பகல் அலர்ட்ஸ்விஸ்ஸில் ஆலங்கட்டி, மழை, சூறாவளி மற்றும் மின்னல் தாக்கம் குறித்து பல மாநிலங்கள் எச்சரித்துள்ளன. ஜெனீவா மற்றும் வாட் மாகாணங்களில் வெளிப்புற நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆர்காவ், டிசினோ, ஜெனிவா, வாட், நியூசெட்டல் மற்றும் ஜூரா ஆகிய மண்டலங்களிலும் இதே போன்ற எச்சரிக்கைகள் முன்பு வழங்கப்பட்டன. வாட் மாகாணத்தில் சனிக்கிழமை பிற்பகல் மற்றும் ஞாயிறு இரவுகளில் அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டன. மேலும் இன்று சனிக்கிழமை நன்பகல் மற்றும் மாலை நேரங்களில் வெளிப்புற நிகழ்வுகளுக்கான அனுமதியை ஜெனீவா ரத்து செய்தது.

இன்று மாலை 6 மணிக்கு சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி இடையே ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்கத்தில் 15,000 வெளிப்புற பார்வையாளர்கள் ஜெனிவாவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்வும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு சுவிட்சர்லாந்தில் நீர் மட்ட அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மலையடிவாரத்தில் உள்ள நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகள் சனிக்கிழமை மாலை முதல் மூடப்படும். மக்கள் ஆற்றின் அருகே இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.

இதேவேளை துணை நதிகளில் வெள்ளம் பாய்வது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நதிகளை புகைப்படம் எடுப்பதையும் வீடியோ எடுப்பதையும் தவிர்க்கும்படி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்