சுவிட்சர்லாந்தின் சுக் மாநிலம் உட்பட பலபகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு
சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளிலும் பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிக்களில் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார் ஒழுங்கமை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ளத்தால் மிகவும் பாதிகப்பட்ட சுக் மாநிலப்பகுதிகளில் இரு வீதிகளை தற்காலிகமாக மூட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை 5:00 மணி முதல் காலை 9:00 மணி வரை, மாநிலங்கள் முழுவதிலும் இருந்து பொலிஸ் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் சுமார் 35 சேதங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தொடர் மழையால் பாதாள அறைகள், சலவை அறைகள், நிலத்தடி வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனித்தனி தெருப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சுக் மாநிலப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேதத்தின் சரியான பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
சுக் பொலிசார் ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்