
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 40 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்றின் சில்லு வெடித்து எதிர்திசையில் வந்த மற்றுமொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டகாரில் இருந்து தென்கிழக்கே 220 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கஃப்ரின் நகரில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக, அந்நாட்டில் மூன்று நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என ஜனாதிபதி மேக்கி சவுல் அறிவித்துள்ளார்.