சேனையூர் மலை உடைப்பு விவகாரம்: 10 பேருக்கு பிணை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு கடந்த சனிக்கிழமை பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன.

பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மீண்டும் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பித்த போது மக்கள் மீண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதன் போது சமாதான குழவை ஏற்படுத்தக் கூடிய செயலை மேற்கொண்ட அடிப்படையில் சம்பூர் பொலிசார் 10 பேரை நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

விடுவிக்கப்பட்ட 10 பேரும் மூதூர் நீதிமன்ற நீதிமன்றில் நேற்று புதன்கிழமை பகல் முன்னிலையான போது நீதிமன்றமானது இவர்கள் அனைவரையும் சொந்தப் பிணையில் விடுவித்ததோடு குறித்த பிரதேசத்தை இம் மாதம் 15 ஆம் திகதியன்று நீதிவான் பார்வையிடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்