ஐகாஸ் உயர் கல்வி நிறுவனத்தின் இரண்டாவது பொதுப் பட்டமளிப்பு விழா

-சம்மாந்துறை நிருபர்-

ஐகாஸ் உயர் கல்வி நிறுவனத்தின் இரண்டாவது பொது பட்டமளிப்பு விழா ஐகாஸ் உயிர்கல்வி நிறுவனத்தின் தவிசாளர் செய்னுலாப்தீன் முஹம்மட் ஹக்கீம் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிக விமர்சையாக நேற்று முன் தினம் சனிக்கிழமை இடம்பெற்றது

இவ்வருட பட்டமளிப்பு விழாவில் 100க்கு மேற்பட்டவர்கள் தமது பட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக இலங்கை, இரத்மலானை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதியும், நிலைத்தன்மை தொடர்பான பல்கலைக்கழக குழுவின் தலைவருமான பேராசிரியர் பிரசன்ன பிரேமதாச, மற்றும் சிறந்த சமூக மற்றும் சர்வதேச கல்வியாளர்கள் சங்களுக்கான உலகளாவிய முன்னோடிகளின் தீர்வுக்கான தலைவர் டாக்டர் கேரி கோல்ஸ்டன் கலந்து சிறப்பித்தார்கள்

மேலும், இவ்விழாவில் பல்வேறு மூத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வித் தலைவர்கள், கௌரவ விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்