தங்கத்தின் விலையில் இன்றைய நாளில் இரண்டாவது மாற்றம்!
தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் இன்று செவ்வாய்க்கிழமை காலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது அதன் விலையில் 5,000 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் உலகச் சந்தையில் ஏற்பட்ட தளம்பல் நிலையே உள்நாட்டுச் சந்தையிலும் இவ்வாறான சடுதியான ஏற்ற இறக்கங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 388,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,563 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
