மே 1 முதல் பாடசாலை வேன் சேவையின் மாதாந்த கட்டணம் குறைக்கப்படும்?
மே முதலாம் திகதி முதல் பாடசாலை வாகனங்களுக்கான மாதாந்த கட்டணங்கள் குறைக்கப்படும் என அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைகள் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
சங்கத் தலைவர் என்.எம்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி அண்மைக்காலமாக எரிபொருள் விலை குறைக்கப்பட்டமை தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்.
கட்டணங்கள் 5சதவீதம் முதல் 8சதவீதம் வரை குறைக்கப்படும் என்றும், இந்த குறைப்பினால் பெற்றோருக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாடசாலை வேன்களின் மாதாந்த கட்டணத்தை தற்போதைக்கு குறைக்க முடியாது என அகில இலங்கை இடை மாகாண பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைகள் சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளன.
பெற்றோர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், வருவாய் உரிம கட்டணத்தை குறைக்கவும், உதிரி பாகங்களின் விலையை குறைக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
