காதலை மறுத்த சிறுமி மீது தாக்குதல்
பௌத்த விகாரை ஒன்றில் ஞாயிறு பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமி மீது நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளதாக கல் ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி காதலை மறுத்ததன் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பௌத்த விகாரைக்குள் ஞாயிறு பாடசாலையில் நுழைந்து தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த மாணவியை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காயமடைந்தவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.