Last updated on January 4th, 2023 at 06:52 am

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின்  மூன்றாம் தவணையின், இரண்டாம் கட்ட  கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி, இன்று முதல் ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து ஜனவரி 21 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை காரணமாக மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 21 திகதி முதல் எதிர்வரும், பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க