Last updated on April 28th, 2023 at 05:12 pm

புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன அறிவிப்பொன்றை தெரிவித்துள்ளார்.

அதன்படி, பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும், என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது. பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும்.

பகுதி ஒன்று வினாப்பத்திரம் கடினமானது என்பதால் பாட விடயதானங்கள் அடங்கிய பகுதி இரண்டின் வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்ததாகவும்,  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.