
மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் 25 பயன் தரும் மரக்கன்றுகள் மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ் ராஜேந்திரனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வானது, அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவியும் கல்வி செயற்பாட்டு அதிகாரியுமான திருமதி.திருமலர்ச்செல்வி மரியநாயகம், அமைப்பின் மண்முனை வடக்கு சமூக அபிவிருத்தி அதிகாரி இ.செல்லத்தம்பி சுரேஷ், அமைப்பின் மண்முனை வடக்கு விவசாயத்துறை அதிகாரி திரு.பாக்கியம் ஜோச் எட்வேட் ஆகியோரின் ஒருங்கிணைத்த நடவடிக்கையாக இடம்பெற்றது.
தனது பிறந்த தினத்தை முன்னிட்டு இன் நிகழ்விற்கு உலகத்தன்மம் சமூக அமைப்பின் அமைப்பாளர் யோகேஸ்வரநாதன் இதயகீதன் அனுசரனை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் அமைப்பின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் இ.செந்தூரன், அமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






















மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

