கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை
கல்விசாரா ஊழியர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாய் கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அதன் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் 48 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பிரச்சினைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய தீர்வை வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
