ஜனாதிபதியின் உரைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில்

வங்குரோத்தடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொன்றாக விளக்கி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினர்.

ஜனாதிபதி ஆற்றிய விசேட உரைக்குப் பதிலளித்த வன்னம் தசராஜ தர்ம கோட்பாடுகளுக்கு அமைவாகவும், உலக நாடுகளுடன் சர்வதேச ரீதியாக கையாளக்கூடிய முறையான திட்டமிடலுடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் தேவைப்பாடு குறித்தும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார நடவடிக்கைகளை குறுகிய சட்டங்களுக்குள் சுருக்கி தற்போதுள்ள பிரச்சினையிலிருந்து மீள முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மாறாக, நவீனமயமாக்கப்பட்ட உகந்த திட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இளம் தலைமுறையினரை ஆட்சியில் பங்கேற்கச்செய்தல், பங்கேற்பு ஆட்சி, நிலைபேறான இலக்குடனான சர்வதேச உறவுகள் தொடர்பாகவும் தனது உரையில் உண்மைகளை விளக்கிக் கருத்துரைத்தார்.