
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடிய மறுசீரமைப்பு முன்மொழிவுகளுக்கான தேசிய பேரவை
மறுசீரமைப்பு முன்மொழிவுகளுக்கான தேசிய பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை கூடியது.
இதன்போது இலவங்கப்பட்டை ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
உலகின் உண்மையான இலவங்கப்பட்டை விநியோகத்தில் 80% பங்கை இன்னும் இலங்கை வழங்குவதோடு, இலங்கை இலவங்கப்பட்டைக்கு சந்தையில் உயர் தர அங்கீகாரமும் நிலவுகிறது.
இந்தத் தொழில் குறைந்த எண்ணிக்கையிலான சொய்கையாளர்கள், குறைந்த எண்ணிக்கையிலான விநியோகஸ்தர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான ஏற்றுமதியாளர்களின் கைகளில் மாத்திரம் சுழலுவதே இலவங்கப்பட்டை தொழில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும்.
இத்தொழில் துறை எதிர்நோக்கி வரும் பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டன.

