
மத்திய கிழக்கு போர் சூழல் குறித்து ஆராய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சஜித்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் மோதல் சூழல் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விசேட கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, அங்கு பணிபுரியும் இலங்கை மக்களின் நலன்கள் குறித்துக் கலந்துரையாடுவதும், இந்த மோதல்களால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அதனை அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதையுமே இந்த கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
