வீதி விதிமுறை கலந்துரையாடல்

-யாழ் நிருபர்-

யாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீதிப்போக்குவரத்து பொலிஸாரால், வீதி போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு நேற்று nrt;tha;fpoik யாழ். இந்துக்கல்லூரியின் மகிழக அரங்கில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி ரஞ்சித் அபயகோன் மற்றும் கமல்டராஜ் பாஸ்கர் ஆகியோர் வருகை தந்து இறுவட்டு மூலம் வீதி விழிப்புணர்வு காணொளியை காண்பித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர் .

தரம் 10 வகுப்பினைச் சேர்ந்த 100 மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.