ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்திற்கான தலைப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் தற்போது ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

அதே சமயம் சிங்கப்பூர் சலூன் என தலைப்பு வைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அது குறித்து தயாரிப்பு நிறுவனமோ, படக்குழுவினரோ எதுவும் கூறாமல் இருந்தனர். இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி – கோகுல் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சிங்கப்பூர் சலூன் என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அந்த தலைப்பையும், முதல் பார்வையையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் டி20 உலக கோப்பையின் தமிழ் கமெண்ட்ரியில் கலந்து கொண்டு வெளிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.