கலப்பட அரிசியை விநியோகிக்கும் அரிசி மாபியா

நாட்டில் தற்போது அரிசி தேவைக்கு அதிகமாக இருப்பதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை உள்ளூர் அரிசியுடன் கலந்து சந்தைக்கு விநியோகிக்கும் மாபியாவொன்று இயங்கி வருவதாகவும், சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நொச்சியாகம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அந்த சங்கத்தின் தலைவராக யு.கே.சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.