வௌ்ளத்தில் சிக்கிய மாணவன் சடலமாக மீட்பு

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேபட நியூச்செட்டல் தோட்டத்தில் வசித்து வந்த பாடசாலை மாணவர் வெள்ளத்தில் சிக்கியதாக நேற்று புதன் கிழமை தெரியவந்தது.

பின்னர் அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரதேசத்தில் உடுவர கிராமசேவர் பிரிவில்  மாணவனின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருந்தது.

சடலம், ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்