கிணற்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்பு
குருணாகல் – வாரியபொல – படிமுனாதோட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரும் அவரது 6 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தமது வீட்டுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த சிறுவனும், அவரது தாயாரும் நீராடச் சென்றுள்ளனர்.
இருவரும் நேற்று இரவு வரை வீடு திரும்பாதமையினால், தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், காணாமல்போயிருந்த இருவரும் இன்று முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்