
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் மீட்பு: நால்வர் கைது
-வவுனியா நிருபர்-
ஏ9 வீதியூடாக இரண்டு வாகனங்களில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஓமந்தை பொலிஸாருக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகளுடன் கூடிய வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை மேலும் ஒரு வாகனத்தை சோதனை செய்ததில் முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 18 மாடுகளுடன் கூடிய வாகனத்தையும் மீட்டதுடன் அதிலும் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
இவ்விரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட நபர்களை விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான குழுவினரே குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


