மட்டக்களப்பு : உயிரிழந்தவரை அடையாளம் காட்டுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் சத்துருக்கொண்டான் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தனியார் சொகுசு பேருந்து நேற்று இரவு 10 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து பயணித்த போது, மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் பகுதியில் வைத்து பெண் ஒருவர் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம்  மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாகவும், குறித்த பெண் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் கொக்குவில் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.