காணாமல் போனவரை தேடும் உறவினர்கள்!

-மஸ்கெலியா நிருபர்-

கடந்த 2 ஆம் திகதி நுவரெலியா, சாந்திபுர, 304 A/3 பகுதியைச் சேர்ந்த ஆர். தங்கம்மா (வயது 76) என்பவர் காணாமல் போயுள்ளார்.

2 ஆம் திகதி காலை சுமார் 11.30 மணியளவில் வீட்டின் பின்புறம் உள்ள வனப் பகுதிக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

இவரை கண்டவர்கள் அல்லது இவர் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொலைபேசி இலக்கம் 0775364391