அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று வியாழக்கிழமை முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.

இதன்படி ஒரு கிரோகிராம் உருளைக்கிழங்கு 75 ரூபாய் குறைக்கப்பட்டு 350 ரூபாவிற்கும், கோதுமை மா 5 ரூபாவினால் குறைப்பட்டு 190 ரூபாவிற்கும் வெள்ளை கௌப்பி 110 ரூபாவினால் குறைப்பட்டு 990 ரூபாவிற்கும் சிவப்பு கௌப்பி 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு 950 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காய்ந்த மிளகாய் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 780 ரூபாவிற்கும், நெத்தலி 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 930 ரூபாவிற்கும், கடலைப் பருப்பு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 185 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்