பருத்தித்துறையில் 50 கிலோ கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்-

பருத்தித்துறை கடலில் இன்று திங்கட்கிழமை அதிகாலை  சுமார் 50 கிலோ கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வல்வட்டித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக வல்வட்டித்துறை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

விரைந்து செயல்பட்ட இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சுமார் 50 கிலோ எடை கொண்ட குறித்த கஞ்சா பொதியை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்