
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC நிதி உதவி
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC 30 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது.
நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணவர்தனவினால் இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
Ceylinco Holdings PLC பிரதி நிறைவேற்றுத் தலைவர் ஆர். ரங்கநாதன் மற்றும் பணிப்பாளர்/ பிரதான செயற்பாட்டு அதிகாரி பெட்ரிக் அல்விஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
