Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு கூடியது

 

டித்வா சூறாவளிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு, அதன் தலைவர், தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

சூறாவளியால் சேதமாகிய அனைத்துத் துறைகளையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியை தொடர்ந்தும் திரட்டுவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, நிதி திரட்டுதல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய மூலோபாய நடவடிக்கைகள் குறித்தும், வெளிநாட்டுத் தூதுவர்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களை தொடர்புபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் நாட்டிலுள்ள அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழுவின் அழைப்பாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.