RCB வெற்றிக் கொண்டாட்டம் : உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் நிதியுதவி!

இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ரோயல் செலேஞ்சர்ஸ் அணி கிண்ணத்தை வென்றது.

இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 4 ஆம் திகதி சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் சன நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ரூபா லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 25 ரூபா லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.