மன்னார்-சிலாவத்துறை காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள ரவூப் ஹக்கீம்
-எம்.என்.எம்.யஸீர் அறபாத்-
சிலாவத்துறையில் கடற்படை ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணி தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
ரவூம் ஹக்கீமின் கேள்விக்குப் பதிலளித்த பிரதிப்பாதுகாப்பமைச்சர்,
இக்காணி தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். பாதுகாப்புக்குழுவிலும் இது பற்றிப்பேசியுள்ளோம். கலந்துரையாடலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இதற்கான சரியான பதிலை வழங்குவோம் எனத்தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் கடற்படை முழுமையாக ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் சிலாவத்துறை பகுதி தொடர்பில் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவிலும், ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.