வேகமாக உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் காரணமாக, உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,172 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 84.54 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

போர்ச் சூழல் நிலவும் போது முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால் (Safe-Haven Demand) தேவை அதிகரித்துள்ளது.

மேலும், அமெரிக்க டொலரின் மதிப்பு மற்றும் சர்வதேச பொருளாதார மாற்றங்கள் விலை உயர்வுக்கு உந்துதலாக அமைந்துள்ளன.

அத்துடன், ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளமை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச சந்தையின் இந்த அதிரடி மாற்றத்தால் இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.