Last updated on January 4th, 2023 at 06:52 am

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் ஜனாதிபதியை சந்தித்தார்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் ஜனாதிபதியை சந்தித்தார்

 

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கெமரன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க