இருதய அறுவை சிகிச்சை முடிந்து நலமாக நாடு திரும்பினார் ரணில்!
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிகிச்சையின் பின்னர் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது பூரண குணமடைந்து நாடு திரும்பியுள்ளார்.
இதேவேளை, சிங்கப்பூரில் ரணில் விக்கிரமசிங்க சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில், சிங்கப்பூரின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் இயோ (George Yeo Yong-Boon) கடந்த சில தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலைக்குச் சென்று அவரது நலம் விசாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
