கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
லால் சலாம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று தொடங்கியது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படங்கள் பாராட்டுக்களை பெற்றன. இப்போது சிறிய இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைகா தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். அந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு லால் சலாம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷாலுடன் நடிகர் விக்ராந்தும் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார். லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். கிரிக்கெட் தொடர்பான கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் பூஜை இன்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் தொடங்கியது. இதில் ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை ரஜினிகாந்த் காலை அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்