QR முறையில் அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (QR) முறையின் கீழ் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என இன்று வெள்ளிக்கிழமை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி மற்றும் விநியோக திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்