QR குறியீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

QR குறியீட்டை வேறு எவரும் சட்டவிரோதமாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும், தற்போதைய சுயவிவர அம்சத்தை நீக்குவதற்கான தெரிவும், மீண்டும் பதிவு செய்வதற்கான தெரிவும் தற்போது கிடைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அத்தகைய QR குறியீடுகளை அடையாளம் காண தகவல் தொழில்நுட்ப முகவரகத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.