மட்டக்களப்பில் ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணத்தின் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீடு

“கிழக்கில் சிவந்த சுவடுகள்” என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம் படைப்பில் உருவான இந்த நூல் வெளியீட்டு விழா ஊடகவியலாளர் செ. பேரின்பராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். சிறப்பு அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரும்  கலந்து கொள்ளவுள்ளார்.

அறிமுக உரையை முன்னாள் கோட்ட கல்விப் பணிப்பாளர் அ. சுகுமாரன் நயவுரைகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி. துரைராசசிங்கம் , பசீர் சேகு தாவூத் ஆகியோரும் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. நிக்சன் சிறப்பு உரையையும் வழங்கவுள்ளனர்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் , மட்டு ஊடக அமையம் இணைந்து நடத்தும் இந்நூல் வெளியீட்டு விழாவில் மற்றும் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்