ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” நூல் வெளியீடு

-மன்னார் நிருபர்-

மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக இடப் பெயராய்வு நூல் வெளியீடு நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது.

மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” என்னும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக இடப்பெயராய்வு நுலானது மன்னார் ரோட்டரி கழகத்தின் தலைவர் பொறியியலாளர் ரொபேட் பீரிஸ் தலைமையில் நேற்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினரான மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கே. அரவிந்தராஜ், மடு பிரதேச செயலாளர் கீதபொன்கலன் நிஜாகரன், மன்னார் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நூலானது மகா வம்ச விஜயனும் 700 தோழர்களும் இலங்கையில் வந்து இறங்கிய இடமானது மன்னார் கட்டுக்கரை பிரதேசம் என்பதை சங்க கால இலக்கிய நூல்களான கம்பராமாயணம், தொல்காப்பியம் உட்பட மகாவம்ச நூல்களின் ஆதாரத்தோடும் தற்கால வரலாற்று ஆசிரியர்கள் வெளியீடு செய்த நூல்களின் துணையோடு கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுக்கரை பிரதேசத்தின் தோற்றம் இவளர்ச்சி அதன் சிறப்பு குன்றியதற்கான காரணங்களை கம்பரா மாயணம், மகா வம்ச நூல்கள் கூறும் இடப் பெயர்களையும் இதற்போது மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இடம் பெயர்களையும் ஒப்பிட்டு ஆய்வு நூலாக வெளி வந்துள்ளது.

இந்த நூலின் பிரதிகளை பாடசாலைகள், நுலகங்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்குவதற்காக மேலதிக அனுசரணைகளை மன்னார் சட்டத்தரணி செல்வராஜா டினேசன், வங்காலை புனித ஆனாள் கல்வி சமூக அபிவிருத்தி குழுவினர், லட்சுமிகரங்கள் தொண்டு நிறுவனத்தினர், செட்டிகுளம் பிரதேச சமூக சேவையாளர் ஜெகன் சிவானந்தராசா போன்றோர் வழங்கியிருந்தார்கள்.

இந்த நிகழ்வில் மன்னார் ஊடக வியலாளர்கள், கல்வியாளர்கள் கலைஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள் போன்றோர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்