1,524 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 1,524 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் இன்று செவ்வாய் கிழமை வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் எம்பிலிபிட்டிய மகாவலி அலுவலக மைதானத்தில் வைத்து வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்