நாளை பொது மன்னிப்பின் கீழ் 309 கைதிகள் விடுதலை
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகள் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கிறிஸ்மஸ் தினத்தன்று பொது மன்னிப்பின் கீழ் 309 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அவர்களில் 306 ஆண் கைதிகளும், 03 பெண் கைதிகளும் அடங்குவர்.
சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு கிறிஸ்மஸ் தினத்தன்று பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.