அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலையை 9 ரூபாவினாலும், 425 கிராம் உள்ளுர் டின்மீன் ஒன்றின் விலையை 45 ரூபாவினாலும்,  ஒரு கிலோ சிவப்பு  அரிசியின் விலையை 5 ரூபாவினாலும் குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

இதன்படி,  ஒரு கிலோ சிகப்பு பருப்பின் புதிய விலை 389 ரூபாவாகவும், 425 கிராம் உள்ளுர் டின்மீன் ஒன்றின் புதிய விலை 540 ரூபாவாகவும், சிவப்பு  அரிசி கிலோ ஒன்றின் விலை 205 ரூபாவாகவும் காணப்படுவதாக சதொச தெரிவித்துள்ளது.