சிற்றுண்டிகளின் விலைகள் குறைகிறது
சிற்றுண்டிகள் சிலவற்றின் விலை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி என்பவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
மேலும், பால் தேனீரின் புதிய விலை 100 ரூபாவாகவும், தேனீரின் விலை 30 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது
