கண்டியில் ஜனாதிபதி விசேட வழிபாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி – வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று வியாழக்கிழமை விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவர் நேற்றையதினம் விசேட உரையினை நிகழ்த்தியதையடுத்து, இன்று காலை கண்டியில் உள்ள தலதா மாளிகைக்குச் சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரையும் சந்தித்து அவர் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்