ஜனாதிபதி இந்தோனேசியாவிற்கு விஜயம்

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டம் இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று   முதல் இம்மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்