வாரஇறுதிக்கான மின்வெட்டு அறிவித்தல்

சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 1-2 மணிநேரம் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை 01 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இதன் போது A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் வார இறுதியில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், திங்கட்கிழமை பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.