இன்றைய மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இந்த வாரத்திற்கான 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் நவம்பர் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W வலயங்களில், பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.